| 245 |
: |
_ _ |a அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a குருவின்துறை |
| 520 |
: |
_ _ |a மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான். இங்கிருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவில் குருவித்துறை உள்ளது. வைகைக் கரையில் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில், சோழவந்தானுக்கு அருகில் உள்ள குருவித் துறை இயற்கை எழில் மிகுந்த ஆற்றங்கரை ஊராகும். இந்த ஊர் அயன் குருவித்துறை மற்றும் கோயில் குருவித்துறை என இரு பகுதிகளாக விளங்குகிறது. இதில், 'கோயில் குருவித் துறை' பகுதியில் அமைந்துள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இக்கோயிலின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோயில் இருக்கிறது. குருபகவான் வைகை ஆற்றங்கரையில் தவமியற்றி பெருமாளின் வரம் பெற்ற திருத்தலம். இதனால் இக்கோயில் குருபகவான் கோயில் என்றே மக்களால் அறியப்படுகிறது. இடைக்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவனான சடாவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி.1101- 1124) காலத்தில் இந்தப் பகுதிக்குக் 'குருவிக்கல்' என்ற பெயர் இருந்திருக்கிறது. வைகை ஆற்றில் ஒரு சிற்றணையை ஒட்டி இருந்த ஆற்றுத் துறை, 'குருவிக்கல்துறை' என அழைக்கப்பட்டுள்ளது. இதுவே குருவித்துறை ஆகியிருக்கலாம். கி.பி.12-ஆம் நூற்றாண்டில் பரஞ்ஜோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் காணப்படும் பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த படலத்தில் குருவித்துறையில் எழுந்தருளி இருக்கும் குரு பகவான் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. குருவித்துறை என்கிற இந்த ஊர், 'குருவிருந்த துறை' என்று திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியைப் பெற்று இக்கோயில் விளங்குகின்றது. பாண்டியர்களின் தூண் கல்வெட்டுகள் மற்றும் கருவறை விமானத்தில் உள்ள தாங்குதளக் கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளில் காணப்படுகின்றன. இக்கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. தூண்கள் நிறைந்த முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் காணப்படுகின்றது. அர்த்தமண்டப முகப்பின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே தளப்பகுதி, ஸ்தூபி ஆகிய கட்டுமானங்கள் பிற்காலத்தவை. புனரமைப்பு பணியாக காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விமானத்தின் கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாக காட்சியளிக்கின்றன. இது பாண்டிய கலைப்பாணியாகும். சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும், மகரதோரணங்களும் அழகு செய்கின்றன. கருவறைத் திருச்சுற்றை ஒட்டி திருச்சுற்று மாளிகை தூண்களுடன் காட்சியளிக்கின்றது. சித்திரரத வல்லப பெருமாளின் கோயிலின் முதற்சுற்றில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். இரண்டாம் திருச்சுற்றில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஆழ்வார்கள் சந்நிதி, ஏகாதசி மண்டபம், தாயார் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. மூன்றாம் திருச்சுற்றில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே குருபகவானுக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. |
| 653 |
: |
_ _ |a குருவித்துறை, குருவின்துறை, குருஸ்தலம், ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கோயில், குருபகவான், குருப்பெயர்ச்சி, மதுரை மாவட்டக் கோயில்கள், வைணவம், வைகை ஆறு |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 902 |
: |
_ _ |a 04543-258303, 99656 70975 |
| 905 |
: |
_ _ |a சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் - கி.பி.1101- 1124 |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. இடைக்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றது. |
| 914 |
: |
_ _ |a 10.0610881 |
| 915 |
: |
_ _ |a 77.9208021 |
| 916 |
: |
_ _ |a ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் |
| 918 |
: |
_ _ |a செண்பகவல்லி |
| 923 |
: |
_ _ |a வைகை ஆறு |
| 926 |
: |
_ _ |a சித்ரா பௌர்ணமி தினம், வைகுண்ட ஏகாதேசி, குருப் பெயர்ச்சி |
| 927 |
: |
_ _ |a பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய கல்வெட்டொன்று இக்கோயிலில் காணப்படுகின்றது. பராக்கிரம பாண்டியன் காலத்தில் அரசு அதிகாரியாக குருவித்துறை பகுதியில் பணியாற்றிய மாதவனான சோழ முத்தரையன் என்பவர் தனது நிலத்துக்காக வைகையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலமாக பாசனம் செய்து வந்தார். அவ்வூரைச் சேர்ந்த மற்றொருவர், அக்கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாயை வெட்டி, தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார். இதனால் ஏற்பட்ட பெரும் சிக்கலைத் தீர்க்கவியலா ஊர்ச்சபையார், இறுதியாக பராக்கிரம பாண்டிய மன்னனிடம் விசாரணையை கொண்டு சென்றனர். பராக்கிரம பாண்டியன் இதனை விசாரணை செய்து. இறுதியாக ஒரு கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாய் உருவாக்குவது சரியான நடைமுறையன்று எனத் தீர்ப்பளித்து, அத்தீர்ப்பினை குருவித்துறை கோயில் கல்வெட்டிலும் பொறித்தான். காலுக்கு மேல் கால் கல்லலாகாது என்பது தான் அந்தக் கல்வெட்டு. மேலும் சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியனின் பெயரால் இவ்வூர் ஸ்ரீவல்லபபுரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயராலேயே இங்குள்ள பெருமாளும் அழைக்கப்படுகிறார். “..........................................................................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிலில் உள்ளாலை நாடகசாலையில் பள்ளிக்கட்டில் பாண்டியராயனில் எழுந்தருளி இருந்து இருபத்திரண்டாவது நாள் இருநூற்றினால் .........................................” அரசனின் 22-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் உள்ள நாடகசாலையில் அமைந்திருந்த பாண்டியராயன் என்னும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருச்சக்கர தீர்த்தத்து நின்றருளிய பரமசுவாமிகள், எம்பெருமாள் என்றும் பெயர் குறிப்பிடப்படுகின்றன. பாகனூர்க் கூற்றத்துப் பிரமதேயம் சோழாந்தகச் சதுர்வேதிமங்கலத்து திருச்சக்கரத்தாழ்வார் என்றும் கூறப்படுகிறது. இக்கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் கொண்டு அறியலாம். இக்கோயிலில் இடைக்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் மொத்தம் 14 உள்ளன. இவை இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலம், பொன் ஆகிய கொடைகள் பற்றிக் கூறுகின்றன. “உய்யக் கொண்டாள்வார்“ என்ற பெயரில் ஒரு செப்புத் திருமேனியை நெற்குப்பை நாட்டு கேரளாந்தகபுரத்து வியாபாரி அப்பன் ஈசுவரனின் மனைவி திருவரங்கன் பெற்றதிரு என்பவள் செய்தளித்துள்ளாள். |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் சித்திர ரத வல்லப பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவரின் இச்சிற்பம் சந்தன மரத்தால் ஆனது. திருமகள், நிலமகள் உடன் நின்ற கோலம். தனிக் கருவறையில் செண்பகவல்லித் தாயார் வீற்றிருக்கிறார். குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் கருவறையை நோக்கி உள்ளனர். கருவறையின் வாயிலில் வாயிற்காவலர் உருவங்கள் அமைந்துள்ளன. மண்டபத் தூண்களில் கிருஷ்ணர், தவழும் கண்ணன், பெண், மலர்கள் ஆகியன புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேற்பகுதியில் சிம்மங்கள் காட்டப்பட்டுள்ளன. கருவறைத் திருச்சுற்றில் ஸ்ரீநிவாசர், யோகநரசிம்மர், விஷ்வக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள் இவர்களின் திருவுருவச் சிற்பங்கள் அமைந்துள்ளன. பூதத்தான் எனப்படும் கருப்பசாமி மற்றும் குருபகவான் ஆகிய தெய்வத் திருவுருவங்கள் தனிக் கோயிலில் வழிபாட்டில் உள்ளன. |
| 930 |
: |
_ _ |a தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடுவே கடுமை யான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. தேவர்கள் தரப்பில் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. பலரும் மாண்டனர். அசுரர்களது தரப்பில் உயிரிழப்பு என்பதே இல்லை. இதற்குக் காரணம் அசுரர்களின் குருவாக விளங்கிய சுக்கிராச்சார்யர்தான். தேவர்களால் தாக்கப்பட்டு இறந்து விழுந்த அசுரர்களின் காதுகளில் 'மிருதசஞ்சீவினி' என்கிற மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். அதுதான் மிருதசஞ்சீவினி மந்திரத்தின் மகத்துவம். இறந்து போனவர்களது காதுகளில் இந்த மந்திரத்தை முறையாகச் சொன்னால்... இறந்து கிடப்பவர், சில விநாடிகளில் எழுந்து உட்கார்ந்து விடுவார். இந்த மந்திரத்தை முறையாக உச்சாடனம் செய்திருந்தார் சுக்கிராச்சார்யர். எனவே, தேவர்களின் தாக்குதலால் வீழும் அசுரர்களின் காதுகளில், மிருதசஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லி அவர்களை உயிர்ப்பித்து, மீண்டும் போருக்கு அனுப்பினார். இதனால், அசுரர்கள் தரப்பு பலத்தை இழக்காமல் ஏற்றம் பெற்றது. தேவர்கள் தரப்பு, உயிரிழப்பு காரணமாகத் துவண்டு போனது. இதனால் கவலை அடைந்த தேவர்கள், இந்திர னிடம் முறையிட்டனர். அப்போது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. 'தேவர்களில் ஒருவரும் இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதுதான் ஒரே வழி... நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் நபர், அசுர குலத்தில் நைச்சியமாக இணைந்து, சுக்கிராச்சார்யரிடம் இருந்து மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டு திரும்ப வேண்டும்' என்று முடிவெடுத்தனர். இதற்குத் தகுதியானவனாக குரு பகவானின் மகன் கசன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அசுர லோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சுக்கிராச்சார்யரின் மகள் பெயர் தேவயானை (முருகப் பெருமான் மணந்த தேவயானை வேறு). அசுர லோகம் சென்ற கசன், தேவயானையின் அன்பைப் பெற்றான். இறந்த உடலை மீண்டும் உயிர்ப்பிக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை வேறு எவருக்கும் சுலபத்தில் கற்றுத் தர மாட்டார் சுக்கிராச்சார்யர். ஆனால், தேவயானையின் அன்பைப் பெற்றவன் என்பதால், இந்த மந்திரத்தைக் கற்பதில், கசனுக்குத் தடை ஏதும் இல்லை. அதேநேரம், மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்க வந்தவன் தேவகுலத்தைச் சார்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், சுக்கிராச்சார்யருக்கும் தெரியாமல் அவனைக் கொன்று விட எண்ணினர். அதன்படி ஒரு நாள், கசனை வஞ்சகமாகக் கொன்று, அவனைச் சாம்பல் ஆக்கி, சுக்கிராச்சார்யர் அருந்தும் பழ ரசத்தில் சாம்பலைக் கலந்து கொடுத்து விட்டனர். வெகு நாட்கள் ஆகியும், கசனைக் காணாமல் தவித்துப் போனாள் தேவயானை. தன் தந்தையிடம் சென்று, 'கசன் இருக்கும் இடத்தைத் தாங்கள் அறிந்து சொல்ல வேண்டும்' என்றாள். கொல்லப்பட்ட கசன் தன் வயிற்றில் சாம்பல் வடிவில் இருப்பதை, ஞான திருஷ்டியால் அறிந்தார் சுக்கிராச் சார்யர். மகளிடமும் கூறினார். 'கசனை எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டும்' என்று தேவயானை கலங்க... மகளின் கோரிக்கைக்கு இணங்கி தன் வயிற்றை வெடிக்கச் செய்து, கசனை உயிருடன் கொண்டு வந்தார் சுக்கிராச்சார்யர். வெளியே வந்த கசன், வயிறு வெடித்து இறந்து கிடந்த சுக்கிராச்சார்யரை, தான் கற்ற மிருதசஞ்சீவினி மந்திரம் சொல்லி உயிர்ப்பித்தான். குருகுல வாசம் முடிந்து கசன் விடைபெறுகிற போது, 'குருதட்சணையாக என்ன வேண்டும்?' என்று சுக்கிராச்சார்யரிடம் கேட்டான். தன் மகள் தேவயானையை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினார் தந்தை. ஆனால் இதை மறுத்த கசன், 'நான் தங்களது வயிற்றில் இருந்து மறுஜன்மம் எடுத்ததால் தங்களுக்கு மகனாகவும், தேவயானைக்கு சகோதரனாகவும் ஆகிறேன். எனவே, அவளை மணந்து கொள்ள முடியாது. மன்னியுங்கள்' என்று சொல்லி, விடைபெற்றான். இதைக் கேள்விப்பட்ட தேவயானை, மிகுந்த கோபமுற்றாள். அசுர லோகத்தை விட்டு அவன் வெளியேறாதவாறு சாபம் இட்டாள். அவளின் சாபத்துக்குக் கட்டுப்பட்ட சப்த பர்வதங்கள், அசுர லோகத்தை விட்டுக் கசன் வெளியேறாதவாறு தடை ஏற்படுத்தித் தடுத்தன. மிருதசஞ்சீவினி மந்திரம் கற்க அசுர லோகம் சென்ற தனது மகன் கசன், வெகு நாட்கள் ஆகியும் திரும்ப வராததால் தவித்துப் போனார் தேவகுரு. நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் தன் ஞான திருஷ்டியால் கசனுக்கு ஏற்பட்ட சாபம் பற்றி விளக்கினார். தேவகுரு இதற்குப் பரிகாரம் கேட்க, 'பூலோகம் சென்று வேகவதி ஆற்றின் (வைகை) கரையில் அமர்ந்து ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களின் இன்னல் தீர்ப்பார்' என்றார். அதன்படி, குருவித்துறையில் அமைந்த இந்த வைகைக் கரைக்கு வந்து தேவகுரு தவம் இருந்தார். குருவின் தவத்துக்கு இரங்கி, ஒரு நாள் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சித்திரங்கள் வரையப்பட்ட தேரில் வந்திறங்கிக் காட்சி தந்தார் திருமால். குருவின் வேண்டுகோள்படி, கசனை மீட்க ஸ்ரீசுதர்சன ஆழ்வாரை அனுப்பினார். ஸ்ரீசுதர்சன ஆழ்வார், சப்த பர்வதங்களையும் விரட்டி கசனை பத்திரமாக மீட்டு வந்து குரு பகவானிடம் ஒப்படைத்தார்! குருவின் பிரார்த்தனைக்கு இரங்கி வந்த பெருமாள், அதன் பின் குரு பகவானின் வேண்டுகோளின்படி இங்கேயே தங்கி விட்டார். குரு பகவானும் தன் மகனைக் காக்க வந்த ஸ்ரீசுதர்சன ஆழ்வாருடன் ஆலயத்துக்கு வெளியே தனிச் சந்நிதி கொண்டுள்ளார். சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் தன் ஆட்சிக் காலத்தில் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தான். அவன் காலத்தில் இந்தப் பெருமாள் ஆலயம் சிறப்புடன் விளங்கியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த மன்னன் காலத்தில் இந்தத் திருக்கோயிலுக்கு, 'திருச்சக்கர தீர்த்தத்து எம்பெருமான் கோயில்' என்றும், 'திருச்சக்கரத்தாழ்வார் கோயில்' என்றும் பெயர் கள் இருந்திருக்கின்றன. இங்குள்ள பெருமாள் 'திருச்சக்கர தீர்த்தத்து எம்பெருமான்' என்றும், 'திருச்சக்கர தீர்த்தத்து நின்றருளிய பரம சுவாமிகள்' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. தூண்கள் நிறைந்த முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் காணப்படுகின்றது. அர்த்தமண்டப முகப்பின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே தளப்பகுதி, ஸ்தூபி ஆகிய கட்டுமானங்கள் பிற்காலத்தவை. புனரமைப்பு பணியாக காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விமானத்தின் கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாக காட்சியளிக்கின்றன. இது பாண்டிய கலைப்பாணியாகும். சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும், மகரதோரணங்களும் அழகு செய்கின்றன. கருவறைத் திருச்சுற்றை ஒட்டி திருச்சுற்று மாளிகை தூண்களுடன் காட்சியளிக்கின்றது. சித்திரரத வல்லப பெருமாளின் கோயிலின் முதற்சுற்றில் ஸ்ரீநிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர் போன்ற விக்கிரகங்கள். இரண்டாம் திருச்சுற்றில் கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, ஆழ்வார்கள் சந்நிதி, ஏகாதசி மண்டபம், தாயார் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. மூன்றாம் திருச்சுற்றில் காவல் தெய்வமான பூதத்தான் எனப்படும் கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே குருபகவானுக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a சோழவந்தான் ஜெனகமாரியம்மன் கோயில், கோச்சடை அய்யனார் கோயில், கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில், பரவை முத்துநாயகி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் குருவித்துறை செல்கிறது. அரசரடி, கோச்சடை, சோழவந்தான் வழியாகச் செல்கிறது இந்தப் பேருந்து. குருவித்துறைப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, சுமார் இரண்டு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். அல்லது ஆட்டோக்களில் செல்லலாம். வியாழக்கிழமைகளில் மட்டும் நகரப் பேருந்து கோயில் முகப்பு வரை செல்கிறது. |
| 936 |
: |
_ _ |a காலை 8.30 மணி முதல் 12.30 மாலை 3.30 மணி முதல் இரவு 5.30 வரை வியாழக்கிழமைகளில் கூடுதல் நேரம் திறந்திருக்கும். |
| 937 |
: |
_ _ |a குருவித்துறை |
| 938 |
: |
_ _ |a மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000110 |
| barcode |
: |
TVA_TEM_000110 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_பலிபீடம்-கல்வெட்டு-0004.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_பலிபீடம்-0005.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_வேள்வி-தூண்-0006.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_மகாமண்டம்-தூண்கள்-0007.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கோயில்-முகப்பு-0001.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கோயில்-உட்புறம்-0002.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கொடிமரம்-0003.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_பலிபீடம்-கல்வெட்டு-0004.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_மகாமண்டம்-தூண்கள்-0008.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தீர்த்த-மண்டபம்-0009.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_சிம்ம-தூண்-0010.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கருட-வாகனம்-0011.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_குதிரை-வாகனம்-0012.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_வாயிற்காவலர்-0013.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_வாயிற்காவலர்-0014.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_திருச்சுற்று-0015.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_விமானம்-0016.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_சுவர்-0017.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கோட்டம்-0018.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_மகரதோரணம்-0019.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தாங்குதளம்-0020.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தாங்குதளம்-கல்வெட்டு-0021.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கோட்டம்-0022.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_மகரதோரணம்-0023.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கருவறை-தென்கிழக்கு-0024.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_சுவர்-0025.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கல்வெட்டு-0026.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_திருச்சுற்று-0027.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்கள்-0028.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_திருச்சுற்று-தூண்கள்-0029.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கருவறை-முகப்பு-0030.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_வாயிற்காவலர்-முகம்-0031.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்கள்-0032.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_ஸ்தூபி-0033.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-சிற்பம்-0034.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-சிற்பம்-0035.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-கல்வெட்டு-0036.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கல்வெட்டு-0037.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கல்வெட்டு-0038.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கல்வெட்டு-0039.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கல்வெட்டு-0040.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_கருட-மண்டபம்-0041.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தலமரம்-0042.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_மண்டபம்-0043.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-அமைப்பு-0044.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-சிம்மம்-0045.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தாயார்-சன்னதி-0046.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_சாளரம்-0047.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_உற்சவ-மண்டபம்-0048.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_உற்சவ-மண்டபம்-கல்வெட்டு-0049.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_முக-மண்டபம்-0050.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_முக-மண்டபம்-0051.jpg
TVA_TEM_000110/TVA_TEM_000110_குருவித்துறை_தூண்-சிற்பம்-0052.jpg
|